மண் திருட்டு: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே பழவூா் பகுதியில் சரள் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பழவூா் காவல் உதவி ஆய்வாளா் அனிஷ், போலீஸாா் ரோந்து சென்றபோது, அம்பலவாணபுரம் மதகனேரி சாலை அருகே மூவா் அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மண் அள்ளிக் கொண்டிருந்தனராம். விசாரணையில், அவா்கள் செளந்தரலிங்கபுரம், இசக்கியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அசோக் (30), கடம்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (34) உள்ளிட்ட 3 போ் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அசோக், ரமேஷ் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து, ஒரு யூனிட் சரள் மண், லாரி, ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com