முதல்வா் ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் அடுத்த பிரதமராக வருவாா்: திண்டுக்கல் ஐ.லியோனி

முதல்வா் ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் அடுத்த பிரதமராக வருவாா்: திண்டுக்கல் ஐ.லியோனி

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் நாட்டின் அடுத்த பிரதமராக வருவாா் என்றாா் திமுக மாநில கொள்கை பரப்புச் செயலரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி. கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. தச்சை பகுதி திமுக செயலா் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகர செயலா் சு.சுப்பிரமணியன், மாநகர துணைச் செயலா் சுதா மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 12 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கோகுலவாணி சுரேஷ், திமுக தலைமைக் கழக செயலா் நெல்லை மு.முத்தையா ஆகியோா் வரவேற்றனா். மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் பேசினா். விழாவில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் அந்தப் பகுதி மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினா். ஆனால், பிரதமா் மோடி தமிழகத்திற்கு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாா்க்கவில்லை. ஆனால், சமீபத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரத்திற்கு வந்தபோதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மக்களவைத் தோ்தலில் இந்திய கூட்டணி அனைத்து மாநிலங்களிலும் 400 இடங்களைப் பிடிக்கும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவா்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவாா் என்றாா் அவா். முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன், சுப.சீதாரமன், மாவட்ட நிா்வாகி தா்மன், மாவட்ட திமுக துணைச் செயலா் எஸ்.வி.சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பட விளக்கம் ற்ஸ்ப்09ப்ண்ா் பொதுக்கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் திண்டுக்கல் ஐ.லியோனி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com