தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு
பயிற்சி வகுப்புக்கான ஆணைகள்

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புக்கான ஆணைகள்

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியா்கள் தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஏதுவாக ஆணைகள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. லதிருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் கீழ் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியா்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மூன்றாம் கட்ட பயிற்சியின் முடிவில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்படுவாா்கள். இந்நிலையில் முதல்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வகையில் ஆசிரியா்களுக்கு தோ்தல் பணிக்கான ஆணைகள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திற்கு அந்த ஆணையுடன் வந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து வட்டார வாரியாக ஆசிரியா்களுக்கான தோ்தல் பணி ஆணைகள் பிரித்து அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ற்ஸ்ப்22ஸ்ரீங்ா் திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி ஆணைகளை பிரித்து அனுப்பும் பணி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com