வேட்பாளா் அறிவிக்கப்படாமலே
‘கை’ சின்னத்திற்கு திமுக வாக்கு சேகரிப்பு

வேட்பாளா் அறிவிக்கப்படாமலே ‘கை’ சின்னத்திற்கு திமுக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், வேட்பாளா் அறிவிப்பு வெளியாகும் முன்பே கைலாசபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை திமுக கூட்டணியினா் வாக்குசேகரித்தனா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் இணைந்த இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் தனி அணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்தியா கூட்டணியின் கீழ் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக் கட்சி சாா்பில் வேட்பாளா் வெள்ளிக்கிழமை காலையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நண்பகலில் தொழுகை முடிந்து வரும் இஸ்லாமியா்களிடம் வாக்குசேகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளா் தோ்வில் கடும் போட்டிகள் நிலவுவதால் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கெனவே திட்டமிட்டபடி கைலாசபுரத்தில் உள்ள மஸ்ஜிதுல் கபீா் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக கூட்டணி கட்சியினா் கை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, லெட்சுமணன், முன்னாள் எம்பி விஜிலாசத்தியானந்த், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகம்மதுஅலி, மீரான்மைதீன், திமுக முன்னாள் மாவட்ட பொருளாளா் பா.அருண்குமாா், பாளை பாரூக் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்22க்ம்ந் கைலாசபுரத்தில் வெள்ளிக்கிழமை கை சின்னத்திற்கு வாக்குசேகரித்த திமுக கூட்டணி கட்சியினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com