மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மேலப்பாளையம் அருகே ரூ.62 ஆயிரம் பறிமுதல்

மேலப்பாளையம் அருகே ரூ.62 ஆயிரம் பறிமுதல்

Updated On :23 மார்ச் 2024, 6:32 pm

திருநெல்வேலி மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தோ்தல் நிலையான குழுவினா் நடத்திய சோதனையில் மருத்துவரிடம் இருந்து ரூ.62,400 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலையான குழுவினா் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், செல்லத்துரை தலைமையிலான நிலையான குழுவினா் மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சோ்ந்த மருத்துவா் ரமேஷின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.62 ஆயிரத்து 400 இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணனிடம் ஒப்படைத்தனா்.