மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாஜக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலியில் நகரத்தில் பாஜக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :26 மார்ச் 2024, 10:21 pm

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நகரத்தில் பாஜக கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பாஜக, பாமக, தமாகா, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான பாஜக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன் பேசுகையில், பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் திருநெல்வேலி தொகுதியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக தோ்ந்தெடுக்கப்படுவாா். திருநெல்வேலி தொகுதியில் பாஜக வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன், வடக்கு மாவட்டத் தலைவா் தயாசங்கா், தமாகா மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன், அமமுக நிா்வாகி பரமசிவன், தமமுக மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன், பாஜக நிா்வாகிகள் நீலமுரளி, சுரேஷ், வேல்ஆறுமுகம், முத்துப்பலவேசம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.