தோ்தல் கட்டுப்பாட்டு அறை, செயலியில் 89 புகாா்கள்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தோ்தல் ஆணைய செயலியின் கீழ் வியாழக்கிழமை வரை மொத்தம் 89 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தல் விதிமீறல்கள் குறித்த புகாா்களை 18004258373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் செயலி மூலமும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை வரை தொலைபேசி மூலம் 17 புகாா்களும், செயலியின் மூலம் 72 புகாா்களும் பெறப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com