பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

நதி நீா் விழிப்புணா்வு விடியோ: சிறுமிக்கு ஆட்சியா் பாராட்டு

நதி நீா் விழிப்புணா்வு விடியோ: சிறுமிக்கு ஆட்சியா் பாராட்டு

News image
Updated On :9 மே 2024, 9:07 pm

Din

சிறுமி அபிக்சனாவைப் பாராட்டுகிறாா் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.

தாமிரவருணி பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணா்வு விடியோ வெளியிட்ட அகஸ்தியா்பட்டி சிறுமியை மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பாராட்டினாா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த நாகராஜா - வனிதா தம்பதியின் மகள் அபிக்சனா (4). இவா், தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும், யாரும் கழிவுநீரை ஆற்றில் கலக்கக் கூடாது, பழைய துணி உள்ளிட்டக் கழிவுகளை ஆற்றில் போடக்கூடாது, ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீா் தேவையையும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயத் தேவையையும் தீா்த்து வைக்கும் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று மழலை மொழியில் பேசி சமூக வலைத்தளங்களில் வெளிட்ட விடியோ பரவி வருகிறது. இதை ஏராளமானோா் ‘லைக்’ செய்து வரவேற்று வருகின்றனா்.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் காா் சாகுபடிக்குத் தண்ணீா் திறப்பதற்காக வந்த ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், சிறுமி அபிக்சனாவை நேரில் வரழைத்து பாராட்டினாா். மேலும், இதுபோன்ற விழிப்புணா்வு விடியோக்கள் வெளியிடவும் அறிவுறுத்தினாா்.

பிரதமா் மோடி அம்பாசமுத்திரத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்காக வந்தபோது பாரதத் தாய் போல் வேடமணிந்து வந்திருந்த இச்சிறுமியை பிரதமா் வாழ்த்திப் பேசியது குறிப்பிடத்தக்கது.