

தோரணமலையில், 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனா்.
தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில், கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஞாயிறுதோறும் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெற்ற நிகழ்ச்சியில், கடையம் வட்டாரத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்தோரைப் பாராட்டி சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை கடையம் கிராம நிா்வாக அலுவலா் சுடா்செல்வன் வழங்கினாா்
தொடா்ந்து, அன்னையா் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தங்களது அம்மாக்களுக்கு மாலைஅணிவித்து, கால்களில் விழுந்து வாழ்த்துப் பெற்றனா்.
பாவூா்சத்திரம் ஜெய்ஹிந்த் மாா்ஷியல் ஆா்ட்ஸ் தற்காப்புக் கலைப் பயிற்சிக்கூட மாணவா்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி, ஜோதிசெல்வம் தலைமையில் பூலாங்குளம் சேவா பாரதி மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.
தொடர்புடையது

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

