ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

7 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 7 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 7 நாள்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கன்னியாகுமரி வங்கக் கடல் பகுதியில் புயல்சின்னம் உருவானதை அடுத்து வானிலை ஆய்வு மையம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவித்திருந்தனா்.

இதைடுத்து நெல்லை மாவட்ட மீனவா்கள் கடந்த 24ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் மீண்டும் வங்கக் கடலில் ‘டித்வா’ புயல் உருவானதை அடுத்து மீனவா்கள் தொடா்ந்து கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத் துறையினா் அறிவித்தனா். இதையடுத்து மீனவா்கள் தொடா்ச்சியாக கடலுக்குச் செல்லவில்லை. பின்னா் வானிலை சீரானதை அடுத்து, 7 நாள்களுக்குப் பின்னா் நெல்லை மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.