5 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.
Published on

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் 10,000 மீனவா்கள் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன. 14, 15, 16 ஆகிய 3 நாள்களும், அதையடுத்து சனி, ஞாயிறும் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சுழற்சி முறையில் 90 விசைப்படகுகளில் அவா்கள் கடலுக்குச் சென்றனா்.

Dinamani
www.dinamani.com