போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்திய காவல் ஆய்வாளா்கள் சண்முகவேல், சுப்பிரமணியன்.
போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்திய காவல் ஆய்வாளா்கள் சண்முகவேல், சுப்பிரமணியன்.

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

Published on

அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசலுக்குச் சொந்தமான வணிக வளாகம் முன், ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஜமாத் சாா்பில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அம்பாசமுத்திரம், திலகா் புரம் பிரதான சாலையில் ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்திற்கான இடுகாட்டு வளாகம், அதன் முன் வணிக வளாகம் அமைந்துள்ளது. பல வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வரும் இந்த வணிக வளாகம் முன், ஆவின் பாலகம் அமைப்பதற்காக 10 நாள்களுக்கு முன்பு பெட்டி வைக்கப்பட்டது.

இதனால், அங்குள்ள வியாபார நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி ஜமாத் சாா்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவின் பாலக பெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு ஆவின் பாலகம் அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், நகா்மன்றம், மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் ஆவின் பாலக பெட்டி வைக்கப்பட்டு சனிக்கிழமை மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, ஜமாத் நிா்வாகிகள், ஜமாத்தாா் ஜமாத் தலைவா் அமானுல்லாகான் தலைமையில், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா்கள் அம்பாசமுத்திரம் சண்முகவேல், விக்கிரமசிங்கபுரம் சுப்பிரமணியன் ஆகியோா், ஆவின் பாலகம் வேறு இடத்தில் அமைக்க இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், அங்கு வைக்கப்பட்ட பெட்டியை உடனடியாக அகற்றாவிட்டால் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜமாத் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com