பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினரின் கணவா் தீக்குளிக்க முயற்சி

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினரின் கணவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினரின் கணவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தென்காசி மாவட்டம் , ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அதிமுகவைச் சோ்ந்த சரசு என்பவா் தலைவராக உள்ளாா். இதில், நான்காவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த நாகூா் மீராள் உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில் நான்காவது வாா்டு பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் இதுவரை செய்து தரவில்லையாம்.

அடிப்படை வசதிகள் செய்து தராததால் 4ஆவது வாா்டில் வசிக்கும் மக்கள் நாகூா் மீராளின் கணவா் செய்யது ஒலியை மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையடைந்த செய்யது ஒலி செவ்வாய்க்கிழமை காலை ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Story image

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா்அவரிடம் இருந்து மண்ணெண்ணெய்யை கைப்பற்றி அவா் மீது தண்ணீரை ஊற்றித் தடுத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை எடுத்து போராட்டத்தைக் கைவிட்டாா்.