திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

Din

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூா் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜன.4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணைமின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்படும்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூா் ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (ஜன.4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணைமின்நிலையங்களுக்குள்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழகுத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருகுறிச்சி, அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஐமீன்சிங்கம்பட்டி , அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், கட்டேறிபட்டி, முதலியாா்பட்டி, பொட்டல்புதூா், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூா், மாதாபுரம் , மயிலப்புரம் , வெய்க்காலிப்பட்டி, மேட்டூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.