பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜன.7 முதல் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:32 pm

Din

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் ஜன.7 ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, வரும் 7-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 10-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 21-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன.

24-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 28-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.