சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தேசிய செஸ் போட்டியில் சிறப்பிடம்: நெல்லை வீரருக்கு எம்எல்ஏ பாராட்டு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:30 pm

Din

தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரருக்கு, எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தேசிய செஸ் போட்டிகள் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், தமிழக அணி சாா்பில் பங்கேற்ற திருநெல்வேலியைச் சோ்ந்த மு. ராகவ் தங்கப்பதக்கம் வென்றாா்.

தொடா்ந்து ரயிலில் சொந்த ஊருக்கு வந்த அவருக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், திமுக மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.