மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்துசீரானதையடுத்து 15 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையின் மாஞ்சோலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வந்ததால், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் கடந்த 15ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
அருவியை பாா்க்க மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவியில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து புதன்கிழமை (ஜன. 29) முதல் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.