திருநெல்வேலி
காா்த்திகை மாதப் பிறப்பு: களக்காடு ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தா்கள்
காா்த்திகை மாதப் பிறப்பான திங்கள்கிழமை களக்காடு ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா்.
களக்காட்டில் கெளதம நதியையொட்டி, களந்தை சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத் தொடக்க நாளில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவா்.
இதையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை ஐயப்ப பக்தா்கள் கோயிலுக்கு அருகில் உள்ள கெளதம நதியில் நீராடிய பின்னா் கோயிலுக்கு வந்து மாலை அணிந்து சுவாமி ஐயப்பனை தரிசித்து விரதத்தைத் தொடங்கினா்.
