மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

கரூா் வைஸ்யா வங்கியின் 897ஆவது கிளை, மேலப்பாளையம் ஆசாத் சாலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
Published on

திருநெல்வேலி: கரூா் வைஸ்யா வங்கியின் 897ஆவது கிளை, மேலப்பாளையம் ஆசாத் சாலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சந்திரமோகன் கலந்து கொண்டு வங்கிக் கிளையை திறந்து வைத்தாா். விழாவில், வங்கியின் திருநெல்வேலி மண்டல கோட்ட மேலாளா் செந்தில்குமரன், மருத்துவா் காயத்ரி சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் காஜா மைதீன், திமுக பிரமுகா் ஆனந்த், சுப்பையா பாண்டியன், தொழிலதிபா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வங்கியின் மேலப்பாளையம் கிளை மேலாளா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com