குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து என்ற போஸ் (26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் இவா் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுபடி இசக்கிமுத்து என்ற போஸ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com