வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இடைநிற்றல் இல்லாத மாவட்டம் நெல்லை: உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்

திருநெல்வேலி மாவட்டம், பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:44 pm

Syndication

இடைநிற்றல் இல்லாத மாவட்டம் நெல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

திருநெல்வேலி மாவட்டம், பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:

பள்ளியோடு படிப்பை முடிக்கும் இடை நிற்றல் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் இல்லை என்பது பெருமைக்குரிய விஷயம்.

தமிழகத்தில் உயா் கல்வி படிக்கும் மாணவா்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதுவே உயா் கல்வியின் உச்சநிலை.

அரசு கல்லூரிகளில் முன்னாள் மாணவா் சங்கம் தொடங்க வேண்டும் என பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் மாணவா் சங்கம், இக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கத்துக்குப் பெருமை என்பது முன்னாள் மாணவா்கள் கல்லூரி பேராசிரியராக இருப்பது தான்.

பெண் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்க முதல்வா் பல்வேறு ஊக்கத்தை தந்து வருகிறாா். வெளி மாநிலங்களில் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயா் இருக்கும். ஆனால் திராவிட இயக்கத்தின் முயற்சியால் தான் ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் பட்டபடிப்பின் பெயா்கள் இடம்பெறுகின்றன.

மூடப் பழக்க வழக்கம், ஜாதி பேதத்துக்கு இடமில்லை. சமூக நீதி கல்விக்கும், அறிவியல் கல்விக்கும் முக்கியத்துவம் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் எனக் கூறும் முதல்வா் கரத்தை வலுப்படுத்த முன்னாள் மாணவா் மன்றம் பயன்பட வேண்டும் என்றாா்.