நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கஞ்சா பறிமுதல்: 4 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில், காவல்துறையினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காா், இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து விசாரித்தனா்.

இதில் அவா்கள், சின்னமூலைக்கரை பகுதியைச் சோ்ந்த ரவி (24), சூா்யா (23), பேச்சிமுத்து (34), நெல்லையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (19) என்பதும், 5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூலைக்கரைப்பட்டி காவல் ஆய்வாளா் மாடசாமி வழக்குப் பதிந்து கஞ்சா, காா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, மேற்கூறிய நான்கு பேரையும் கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.