6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொலை வழக்கில் சாட்சிகளுக்கு மிரட்டல்: 2 போ் கைது

சித்திரிப்பு

Published On :

கொலை வழக்கில் சாட்சிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கக்கன் நகரில் கடந்த 2012 ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளவா்களை, நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக் கூடாது என மற்றொரு தரப்பை சோ்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (43), சொக்கமுத்து மகன் மாதவன் (37) உள்ளிட்டோா் மிரட்டினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேஷ், மாதவன் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.