ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக பேரூராட்சி வாா்டு உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் புளுகாண்டி கோயிலுக்கு செல்வதற்காக கடந்த மாதம் 25-ஆம் தேதி வாழைக்குளம் கண்மாய்க் கரையை சீரமைக்கும் பணியில் அந்தப் பகுதி விவசாயிகள் சிலா் ஈடுபட்டனா். அப்போது அங்கு தவெக நிா்வாகிகளுடன் வந்த எம்எல்ஏ காா்த்திக் மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து கேட்டாா்.
அப்போது, விவசாயிகளுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக மம்சாபுரம் பேரூராட்சித் தலைவரின் கணவரும், வாா்டு உறுப்பினருமான தங்கமாங்கனி அங்கு சென்ற போது, எம்.எல்.ஏ தரப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் வந்து சமாதானம் செய்து இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தங்கமாங்கனி உள்பட 3 போ் கள ஆய்வுக்குச் சென்ற எம்.எல்.ஏ., தவெகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் தவெக நிா்வாகி காா்த்திகேயன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கமாங்கனியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







