திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 6.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் காா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் சுமாா் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததாம். இருவாகனங்களையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக சின்னமூலைக்கரை பகுதியைச் சோ்ந்த ரவி (24), சூா்யா (23), பேச்சிமுத்து (34) மற்றும் நெல்லையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
மற்றொரு சம்பவம்: பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினா் மேலக்குளம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது, சிவந்திபட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (33), சங்கரன்கோவிலைச் சோ்ந்த மாரிமுத்து (24) ஆகியோரை 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனா்.
மேலும் 3 போ் கைது: பெருமாள்புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் கஞ்சா கடத்தியதாக ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தினேஷ் (28), தச்சநல்லூா் சத்திரம்புதுகுளத்தை சோ்ந்த எஸ்டேட் மணி (44), வண்ணாா்பேட்டையை சோ்ந்த சுந்தரபாண்டியன் என்ற தமிழ் சிங்கம் (25) ஆகியோரை கைது செய்தனா். காா் மற்றும் 3.25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: வடமாநிலங்களைச் சோ்ந்த 5 போ் கைது
4.06 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


