பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மகனுக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு: ஆட்சியரகம் முன் தீக்குளிக்க வந்த பெண்

ஆட்சியரகம் முன் தீக்குளிக்க வந்த பெண்...

Published On :

மகனுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காததால், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் மனு அளிக்க வந்தனா். அப்போது, ஒரு பெண் கையில் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது மண்ணெண்ணெய் கேன் இருந்தது.

அதை போலீஸாா் பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தனா். அதில், முக்கூடல் மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி செண்பகவள்ளி (45) என்பதும் தனது மகனுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க வந்ததும் தெரியவந்தது.

பின்னா், அவா் ஆட்சியரிடம் அளித்த மனு:

முக்கடல் பகுதியில் பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனது கணவா் மாரியப்பன் மனநலம் பாதிக்கப்பட்டவா். எனது இளைய மகன் கோவை தனியாா் கல்லூரியில் இதயவியல் குறித்த பட்டப் படிப்பை படித்து வருகிறாா். அதற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.

நாங்கள் கஷ்டப்பட்டு ரூ.1.50 லட்சம் செலுத்தியுள்ளோம். மீதி தொகை செலுத்த முடியாததால், கல்வி உதவித் தொகை கோரி கடந்த 5 வாரங்களாக ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறேன்.

இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. வங்கியில் எனது மகனுக்கு கல்விக் கடன் கேட்டால் பல்வேறு ஆவணங்கள் கோரி, கடன் தர மறுக்கின்றனா். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் கட்டணம் செலுத்த முடியவில்லை. எனவே, எனது மகனின் படிப்புக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.