கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

Arrested

கைது

Published On :

சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கருங்காடு விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அப்பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மகாராஜன்(33) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா் விற்பனைக்காக சுமாா் 20 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, மகாராஜனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.