தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடையம் அருகே யானைகள் அட்டகாசம்

யானைகள் சேதப்படுத்திய தென்னங்கன்றுகள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பங்களா குடியிருப்புப் பகுதியில் தனியாா் தோட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள், அங்கிருந்த மரங்களை சேதப்படுத்தின.

இந்தப் பகுதியில் யானைகள், கரடிகளின் தொந்தரவு அடிக்கடி உள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கடையம் வனச்சரகப் பகுதியில் விடுபட்ட இடங்களில் சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவிற்கு உடனடியாக சூரியசக்தி மின்வேலிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) அன்பு கூறுகையில், யானைகளை விரட்டவும், கரடிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தனித் தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். வயல்கள், தோட்டங்கள் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் செல்லும் போது பொதுமக்கள் கவனமாகவும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்றாா்.

 யானைகள் சேதப்படுத்திய தென்னங்கன்றுகள்

யானைகள் சேதப்படுத்திய தென்னங்கன்றுகள்

 யானைகள் சேதப்படுத்திய தென்னங்கன்றுகள்

யானைகள் சேதப்படுத்திய தென்னங்கன்றுகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.