பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

நெல்லையப்பா் கோயிலில் இன்று முதல் கைப்பேசிக்குத் தடை

கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:16 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை(செப்.1) முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமாா் 52 கோயில்களில் கைப்பேசி எடுத்துச் செல்ல செப்.1 முதல் தடைவிதிக்கப்படும் என அத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை(செப்.1) முதல் கைப்பேசி பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்படுகிறது.

பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை திருக்கோயிலின் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலில் உள்ள கைப்பேசி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கைப்பேசி ஒன்றிற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.