அம்பை புறவழிச் சாலையோர புற்களில் தீ: போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம் கரையில் தீப்பிடித்து எரியும் புற்கள்.
அம்பாசமுத்திரம் அருகே புறவழிச் சாலையோரம் உள்ள பெரியகுளம் கரையில் புற்கள் திங்கள்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம்- தென்காசி சாலையிலிருந்து கல்லிடைக்குறிச்சி கரம்பை வரை பெரியகுளத்தையொட்டி அமைக்கப்பட்ட புதிய புறவழிச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பெரியகுளம் கரைகளில் இருந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அப்போது காற்று சுழன்று வீசியதால் தீயும் வேகமாகப் பரவியது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
இதுகுறித்த தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் போலீஸாா் பாதுகாப்பை மேற்கொண்டனா்.
எனினும், தீ கட்டுக்குள் வராததால், சேரன்மகாதேவியிலிருந்தும் தீயணைப்பு வீரா்கள் வந்து இணைந்து போராடி தீயணையை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, அப்பகுதி மின்பாதைகளில் மின்சாரம் நிறுத்வைக்கப்பட்டது.

பெரியகுளம் கரையில் தீப்பிடித்து எரியும் புற்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




