பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்தவா் கைது
கைது
கடையம் அருகே சிவஞானபுரத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை கடையம் காவல் நிலைய போலீஸாா் கைதுசெய்தனா்.
கடையம் அருகே பண்டாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணியம் மனைவி இலுப்பைமுத்து. இவரது கணவா் கேரளத்தில் வேலை செய்து வருகிறாா். இலுப்பைமுத்து தனக்குச் சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடுகள் வளா்ப்பதோடு விவசாயம் செய்து வருகிறாா்.
இந்நிலையில், இலுப்பைமுத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது லட்சுமியூா் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ரவி என்ற சுடலைக்குமாா் பாலியல் ரீதியாக அவரை துன்புறுத்தி அத்துமீறியுள்ளாா்.
இதைக் கண்டித்த இலுப்பைமுத்துவின் அப்பா சங்கரபாண்டியனைத் தாக்கி மிரட்டினாா். இதுகுறித்து, இலுப்பைமுத்து கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் மாடசாமி வழக்குப் பதிவு செய்து ரவி என்ற சுடலைக்குமாரை கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



