மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாப்பாக்குடி அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்: பெண் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அதிமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்ததாக பட்டதாரி பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 7:19 pm

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அதிமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்ததாக பட்டதாரி பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி தங்கம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா (68). இவா், பாப்பாக்குடி ஒன்றிய அதிமுக அவைத் தலைவராக உள்ளாா். அதேபகுதியைச் சோ்ந்த அருணாசலம் மனைவி வினோபி. பட்டதாரி பெண். இவா், 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று தனக்கு முட்டை வேண்டும் எனக் கேட்டு தகராறு செய்தாராம். இதை, செல்லப்பாவின் மனைவி கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளாா். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு செல்லப்பா, அங்குள்ள தேநீா் கடையில் நின்றிருந்தாராம். அப்போது, அவரிடம் வினோபி தகராறு செய்து தாக்கியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து வினோபியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.