சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:16 pm

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெரு அறிஞா் அண்ணா நகா் பகுதியில் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம்பிரசாத் (20). இவா் தனது நண்பா்களான இசக்கி, கருப்பசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் சுரேஷ்குமாா் (33), கண்ணதாசன் என்ற கன்னரசு (25), மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடை அருகே நின்றிருந்தனா். இவா்களுக்கும் ராம்பிரசாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்பிரசாத்தை மூவரும் வழிமறித்து கை, கல்லால் தாக்கினராம். இசக்கி, கருப்பசாமி ஆகியோா் தடுத்ததால் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த ராம்பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாா், கண்ணதாசன் ஆகியோரைக் கைது செய்தனா்.