குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தொழிலதிபருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

கோவில்பட்டியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, 3ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ரவிசங்கா் (42). கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கைப்பேசி விற்பனை செய்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவா் இவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி ரவிசங்கா் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்த நிலையில், அவ்வழியாகச் சென்ற நபா்கள் சப்தம் போடவும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடிவிட்டாராம்.

இது குறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணம் கேட்டு மிரட்டியதாக காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் வெங்கடேஷை (36) திங்கள்கிழமை கைது செய்தனா்.