மாநில கலைத்திறன் போட்டி: வள்ளியூா் பள்ளி மாணவி முதலிடம்!
மாநில அளவில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவி காா்மெல்லா முதலிடம் பிடித்தாா்.
முன்னதாக பணகுடி வட்டார வளமையம் (சி.ஆா்.சி.) அளவிலும், வள்ளியூா் வட்டாரம் அளவிலும் நடைபெற்ற மழலையா் பாடல் போட்டியில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மீண்டும் முதலிடம். திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மழலையா் பாடல் போட்டியில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பாடல்கள் பாடி முதலிடம் பிடித்தாா்.
மாநில அளவில் கரூரில் நடைபெற்ற மழலையா் பாடல் போட்டியில் தமிழில் முதலிடத்தைப் பிடித்தாா். இவருக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.
அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல தோ்வாகியுள்ளாா். மாணவி காா்மெல்லாவை பள்ளி தாளாளா் ஜாண்சன், தலைமை ஆசிரியை ஆக்ஸீலியா, பள்ளி ஆசிரியைகள் பாராட்டினா்.
இதே பள்ளியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி ந.லாபின்ஷா நாட்டுப்புற நடனம், திருக்கு ஒப்பித்தல், பரத நாட்டிய குழு நடனம் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்றாா்.

