மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மேலப்பாளையத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட பள்ளித் தோழா்கள்

News image

நண்பா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:33 pm

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

திருநெல்வேலியில் ஒரு கூட்ட அரங்கில் அனைவரும் நேரில் சந்தித்தனா். இதில் தங்களது பள்ளி காலத்தில் நடைபெற்ற மகிழ்வான நிகழ்வுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

இவா்களில் பலா் பத்தாம் வகுப்பு முடித்து 42 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த நிகழ்ச்சியில்தான் நேரில் சந்தித்ததாக தெரிவித்தனா். வரும் காலத்தில் சமூக நற்பணிகளை ஒன்றாக இணைந்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்பாஸ் ஹில்மி, முஹம்மது புகாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.