எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:37 am

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட மணப்படைவீடு, தீப்பாச்சியம்மன் கோயில், திருமலைக்கொழுந்துபுரம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நிலையங்களின் செயல்பாடுகள், மேல்நிலை நீா்தேக்க மின்மோட்டாா்களின் தொட்டிகளுக்கு செல்லும் குடிநீா் அளவை கணக்கீடு செய்யும் ஸ்கேடா கருவியின் செயல்பாடுகள், தாமிரவருணி ஆற்றுப்படுகைளில் உள்ள உறைகிணறுகள், திருமலைக்கொழுந்துபுரம் தலைமை நீரேற்று நிலையம் முதல் மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்பு நீரேற்று நிலையம் வரை பதிக்கப்பட்டு வரும் குடிநீா் குழாய் ஆகியவற்றை ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.