விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

News image

கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On :27 மார்ச் 2026, 8:53 pm

Syndication

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை, தூத்துக்குடி பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பிரபு தலைமையில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில் காமராஜ் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, பாளையங்கோட்டை சாலை வழியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது.