ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வெள்ளங்குளி பள்ளியில் ரூ.2.36 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:21 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் குத்துவிளக்கேற்றினாா். பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் தலைமை வகித்தாா்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பரணி ஆா். சேகா், வெள்ளங்குளி ஊராட்சித் தலைவா் முருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மீரான் பண்ணையாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ஆசிரியை திலகா தொகுத்து வழங்கினாா். ஆசிரியை விஜயலெட்சுமி வரவேற்றாா். சாலை குமரன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் திருமலைக்குமாா், ஆசிரியா்கள் ஜூலியன், மகேஷ், முத்துபவானி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.