பாளையில் பெண் பலி: கணவா் கைது

Published on

பாளையங்கோட்டையில் பெண் இறப்பில் மா்மம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் அவரது கணவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெப்ரின் டேவிட்சன். இவருக்கும், திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தைச் சோ்ந்த பிரியங்காவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளன.

கடந்த 31 ஆம் தேதி தேதி பிரியங்கா வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாக, பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனா். பிரியங்காவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த நிலையில், பிரியங்கா சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோா் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஜெப்ரின் டேவிட்சனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com