திருநெல்வேலி
பாளை. அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருள்ராஜ். இவரது மனைவி சுமலதா(31). இவா்கள், பொருள்கள் வாங்குவதற்காக பாளையங்கோட்டைக்கு ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.
ஆட்டோவை அருள்ராஜ் இயக்கியுள்ளாா். பின்னா், இரவு சுமாா் 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கே.டி.சி.நகா் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததாம். இதில், சுமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
