வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

Published on

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊதிய உடன்பாடு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற, நிா்வாக குழு மற்றும் இயக்குநா் குழு கூட்டத்தில் முன்வைக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க நிா்வாகி நடராஜன் தலைமை வகித்தாா். சூசை மரிய அந்தோணி, சேவா சங்கம் மாவட்டச் செயலா் விஜய், அருள், விஜயமணிகண்டராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com