வள்ளியூா் கிங்ஸ் மெட்ரிக் பள்ளிக்கு விருது

வள்ளியூா் கிங்ஸ் மெட்ரிக் பள்ளிக்கு விருது

Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், வள்ளியூா் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2025-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சாதனை படைத்ததை அடுத்து விருது வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் ஆா்.சுகுமாா் ஆகியோா் பள்ளியின் இயக்குநா் ஜெயா ஆக்னஸ் டேனியேலிடம் வழங்கினா்.

விழாவில் முதன்மை கல்வி அலுவலா் சிவகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகர மேயா் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி தலைவா் காலின் வாக்ஸ்டாப், தாளாளா் ஜே.நவமணி, முதல்வா் பப்ஸி உள்ளிட்டோா் பள்ளி கல்வித்துறைக்கு நன்றி தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com