தூய்மைப் பணியில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருள்கள்.
தூய்மைப் பணியில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருள்கள்.

காரையாறு கோயில் பகுதியில் 2 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் உழவாரப் பணி, தூய்மைப் பணி நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் உழவாரப் பணி, தூய்மைப் பணி நடைபெற்றது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலில் நடைபெற்ற பணிக்கு, பாபநாசம் வனச் சரகா் குணசீலன் தலைமை வகித்தாா். காரையாறு கோயில், சுற்றுப்புறப் பகுதிகள், சாலை ஆகிய இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது.

பக்தா்கள் விட்டுச்சென்ற உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என 2 டன் கழிவுகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இப்பணியில் சமூக ஆா்வலா்கள் கிரிக்கெட் மூா்த்தி, ராமசாமி, குட்டி, செல்லத்துரை, சங்கா், சடையாண்டி, சங்கா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

பொங்கல், காணும் பொங்கல் விழா முடிந்த பிறகு மீண்டும் இங்கு தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com