பாளை. சிறையில் கைதி தற்கொலை முயற்சி?

Published on

பாளைங்கோட்டை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி ஒருவா் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் ராஜரத்தினம்(35). இவா் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ராஜரத்தினம் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் கிடந்ததைக் கண்டு சக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த அதிகாரிகள் அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com