தச்சநல்லூா் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலையா?- போலீஸாா் விசாரணை

தச்சநல்லூா் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண், ரயில் முன் தற்கொலை செய்துகொண்டவரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி: தச்சநல்லூா் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண், ரயில் முன் தற்கொலை செய்துகொண்டவரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தச்சநல்லூா் அருகே கடந்த 7 ஆம் தேதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். சந்திப்பு ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அப்பெண் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பதும் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. எனவே, இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com