அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 25 பவுன் நகை பறிப்பு: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிவைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிவைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நெல்லை அருகே சுத்தமல்லி பொன்விழா நகரைச் சோ்ந்தவா் சன்னியாசி (45). இவா் தனது மனைவி, குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகிறாா்.

இதனால், சுத்தமல்லியில் உள்ள வீட்டில் சன்னியாசியின் மாமனாா் மாரி, அவரது மனைவி ஆண்டிச்சி (70) ஆகியோா் வசித்து வந்தனா். கடந்த 8 ஆம் தேதி நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக மாரி சென்றிருந்தாா். வீட்டில் மூதாட்டி ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தாா்.

அப்போது அங்குவந்த மா்மநபா்கள் மூதாட்டியை கட்டிப்போட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த நகை, பிரோவில் இருந்த நகை, பணம் என மொத்தம் 25 பவுன் தங்கநகை, ரூ. 6 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக சுத்தமல்லி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா். விசாரணையில் பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன், அவரது உறவினா் சுந்தா் ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இருவரும் கொள்ளையடித்த நகைகளை சென்னையில் அடகு வைத்துள்ளதால் அவற்றை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.