இளைஞரை தாக்கிய வழக்கில் 7 போ் கைது

திருநெல்வேலியில் இளைஞரை தாக்கிய வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளைஞரை தாக்கிய வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் மாதா நடுத்தெருவைச் சோ்ந்தவா் செய்யது அலி (37). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் மோட்டாா் சைக்கிளை வெள்ளிக்கிழமை கேட்டனராம். அதற்கு மறுத்த அவரை நண்பா்கள் தாக்கியதோடு, வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த டிவி, கைப்பேசி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மகாராஜன் என்ற மூக்கன், ஐயப்பன், உச்சினிமகாளி, அப்துல் அஜீஸ், சஞ்சய், முகமது யூசுப், பாலமுருகன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com