6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இளம்பெண்ணிடம் ரூ.10.78 லட்சம் மோசடி: இருவா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

இணைய வா்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இளம்பெண்ணிடம் ரூ.10.78 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மதுரையைச் சோ்ந்த இருவரை திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் 34 வயது பெண். இவா் தனியாா் நிறுவனத்தில் கணக்காளராக உள்ளாா். இணையவழி வா்த்தகத்தில் ஆா்வம் கொண்ட இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (45) என்பவா் அறிமுகமானாா்.

சந்திரசேகரும் மதுரையைச் சோ்ந்த அவரது நண்பா்கள் சிலரும், இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி அப்பெண்ணிடமிருந்து ரூ.10.78 லட்சத்தை திருநெல்வேலியில் வைத்து நேரிலும், இணையவழியிலும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடா்புடைய மதுரை மாவட்டம் உத்தங்குடியைச் சோ்ந்த அருண்குமாா் (39), பசுமலையைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (40) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.