கருத்தப்பிள்ளையூா் அருகே கரடி தாக்கியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட கருத்தப்பிள்ளையூா் வடமலைசமுத்திரம் இடையே உள்ள வயலுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒருவா் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கரடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
அவரின் உடல் அருகே கரடி நின்றிருந்தது. இது குறித்த தகவலறிந்து வந்த கடையம், பாபநாசம் வனச்சரகப் பணியாளா்கள் நீண்ட நேரம் போராடி கரடியை விரட்டினா். இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாழையூத்து அருகே விபத்து: சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு

பைக் மோதி தொழிலாளி பலி

சங்கரபாண்டியபுரத்தில் வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



